குதிரை நடமாட்டம் நகராட்சி மெத்தனம்
ஊட்டி: ஊட்டி நகரில் கால்நடை , குதிரைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை நடுவே சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளின் நடமாட்டத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் , பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் , நகராட்சி நிர்வாகமும் பொதுமக்களின் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கால்நடை , குதிரைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் குதிரைகள் சுற்றிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நகராட்சி நிர்வாகம் நகரில் ஆய்வு மேற்கொண்டு குதிரை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். என, பாதசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சமூக வலைதளத்தில் பிரசாரம்
-
வேளாண்மை இணை இயக்குனர் குமராட்சி வட்டாரத்தில் ஆய்வு
-
வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி திருவிழா ஆலோசனைக்கூட்டம்
-
சம்பா சாகுபடி நிலத்தில் மாணவிகளுக்கு பயிற்சி
-
மாணவ, மாணவிகளுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
-
‘ கூடுதல் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 2029 வரை நீட்டிப்பு’: பழங்குடியினர் பயன்பெற நடவடிக்கை
Advertisement
Advertisement