சுகாதாரத்துறையை நவீனப்படுத்த நிதி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுகாதாரத்துறையை நவீனப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடம் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் நவீன வசதிகளை ஏற்படுத்தவும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் மருத்துவ வசதிகளை மேலும் நவீனப்படுத்துவதுடன், உயர்தர மருத்துவக் கருவிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். எனவே, மத்திய அரசு இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
ஜிப்மரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போதுள்ள வசதிகள் அதற்கு போதுமானதாக இல்லை.
எனவே புற்றுநோய் மற்றும் இதய நோய் சிகிச்சைக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவசர சிகிச்சை மற்றும் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகளை நவீனப்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவமனையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் புதுச்சேரி மாநில மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் நட்டா, உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சமூக வலைதளத்தில் பிரசாரம்
-
வேளாண்மை இணை இயக்குனர் குமராட்சி வட்டாரத்தில் ஆய்வு
-
வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி திருவிழா ஆலோசனைக்கூட்டம்
-
சம்பா சாகுபடி நிலத்தில் மாணவிகளுக்கு பயிற்சி
-
மாணவ, மாணவிகளுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
-
‘ கூடுதல் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 2029 வரை நீட்டிப்பு’: பழங்குடியினர் பயன்பெற நடவடிக்கை