புரசைவாக்கத்தில் அழுகிய நிலையில் மூத்த தம்பதியின் உடல்கள் மீட்பு
கீழ்ப்பாக்கம்: புரசைவாக்கத்தில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த மூத்த தம்பதியின் உடல்கள் மீட்ட போலீசார், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புரசைவாக்கம், சரவணபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ், 78. நகைப்பட்டறை தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சந்திரா, 72.
சொந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தன்ராஜ், சில மாதங்களுக்கு முன் தொழிலை கைவிட்டுள்ளார்.
மனைவியின் நகைகளை விற்று கிடைத்த பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அதிலிருந்து கிடைத்த வட்டி பணத்தில் இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
இவர்களது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் தன்ராஜ் அழுகிய நிலையிலும், அருகே சிதறிய மாத்திரைகளுடன் சந்திரா உயிரிழந்த நிலையிலும் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தன்ராஜ் ஐந்து நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து சந்திராவும் உயிரிழந்தாரா அல்லது இருவரது இறப்புக்கும் வேறு காரணங்கள் எதாவது உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
-
பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமருக்கு சத்ய சாய் பள்ளி மாணவர்கள் வரவேற்பு
-
குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்யும் வேலை தீவிரம்
-
சபரிமலை ஏறும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? கேரள சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
-
பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி
-
தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால் 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும் அன்புமணி நம்பிக்கை