தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால் 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும் அன்புமணி நம்பிக்கை
கடலூர்: ‘‘தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், ஆறே மாதங்களில், 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும்,’’ என, அக்கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகாவிற்கு எந்த உரிமையும் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு உரிமை உள்ள தண்ணீரை வழங்க மறுக்கின்றனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, கர்நாடகாவை சேர்ந்த, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகிறார். ஆனால், கடைமடை மாநிலங்களின் அனுமதி இல்லாமல், முதல்மடை மாநிலம் எந்த கட்டுமானமும் கட்டக்கூடாது என்பதே உலக நியதி.
கர்நாடகாவில், 2028ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஜெயிப்பதற்காக, அம்மாநில அரசியல்வாதிகள் மேகதாது விவகாரத்தை வரிந்து கட்டிக் கொண்டு பேசி வருகின்றனர். ஆனால், அவர்களால் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. வீரப்பன் இருந்திருந்தால், மேகதாது என்ற ஒரு வார்த்தை கூட வந்திருக்காது. அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகி விடும்.
தமிழகத்தில் தனியார் தொழிற்சாலைகள் எங்கு தொடங்கினாலும், உள்ளூர் மக்களுக்கு, 80 சதவீத வேலைகளை வழங்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும்.
பா.ம.க.,விற்கு நிர்வாக அனுபவம், அரசியல் அனுபவம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், ஆறே மாதங்களில், 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
-
பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமருக்கு சத்ய சாய் பள்ளி மாணவர்கள் வரவேற்பு
-
குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்யும் வேலை தீவிரம்
-
சபரிமலை ஏறும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? கேரள சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
-
பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி
-
புரசைவாக்கத்தில் அழுகிய நிலையில் மூத்த தம்பதியின் உடல்கள் மீட்பு