வாக்காளர் பட்டியல் திருத்த 13,600 பேர் விண்ணப்பம்

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்.ஐ.ஆர்.,) சிறப்பு முகாம்களில், 2 நாட்களில் 13,600 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்காக கடந்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 1,067 ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த இந்த முகாம்களில், 21ம் தேதி 4,721 விண்ணப்பங்களும், நேற்று 8,879 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

மொத்த விண்ணப்பங்களில், புதிதாக பெயர் சேர்க்க 5,449 பேரும், பெயர் நீக்கம் செய்ய 627 பேரும், திருத்தங்கள் செய்ய 7,524 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தொகுதி வாரியாக பார்க்கும்போது, கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 2,434 விண்ணப்பங்களும், மேட்டுப்பாளையத்தில் 1,821 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு தொகுதியில் 1,513, சூலுாரில் 1,454, தொண்டாமுத்துாரில் 1,445 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவை தெற்கு தொகுதியில் குறைந்தபட்சமாக 696 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

அடுத்ததாக, வரும் 29ம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement