போலீஸ் ஸ்டேஷன் நுாலகத்திற்கு மாஜிஸ்திரேட் புத்தகம் வழங்கல்
22.11.2026, விருத்தாசலம், வே.ரமேஷ்குமார், 99444 00783, கீ. நேரம் இரவு 9.15விருத்தாசலம், நவ. 23–
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள நுாலகத்திற்கு, மாஜிஸ்திரேட் புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பில், நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வழக்கு சம்பந்தமாக புகார் தர வருவோர் நலன் கருதி, போலீஸ் ஸ்டேஷன் வளாகம் விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், மனுதாரர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், ‘அறிவகம்’ என்ற பெயரில் சிறிய நுாலகம் திறக்கப்பட்டது. இந்த நுாலகம் பொது மக்கள், மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் அரவிந்தன் நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர், நேரத்தை பயனளிக்கும் வகையில் மாற்றியதை பாராட்டிய அவர், 17 அறிவுசார் புத்தகங்களை இன்ஸ்பெக்டர் சந்துருவிடம் பரிசாக வழங்கினார்.
மேலும்
-
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
-
பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமருக்கு சத்ய சாய் பள்ளி மாணவர்கள் வரவேற்பு
-
குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்யும் வேலை தீவிரம்
-
சபரிமலை ஏறும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? கேரள சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
-
பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி
-
புரசைவாக்கத்தில் அழுகிய நிலையில் மூத்த தம்பதியின் உடல்கள் மீட்பு