காட்டு பன்றிகளால் சேதமாகும் பயிர்கள்

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விராலிப்பட்டியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை கொண்டு சிறு, குறு விவசாயிகள் அவரை, மக்காச்சோளம், நெல், கடலை, காய்கறி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை தோண்டி சேதப்படுத்துவதும், அவரை பந்தலுக்குள் புகுந்து கொடிகளை பிடுங்குவதும், வளர்ந்து வரும் மக்காச்சோளச் செடிகளை சாய்த்து விட்டு செல்வதும் என நாளுக்கு நாள் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகரித்து உள்ளன.

விவசாயிகள் கூறியதாவது: தற்போது நெல் நடவு செய்துள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் நெல் நாற்றுகள் சேதம் அடைந்துள்ளன. மரவள்ளி கிழங்கு இப்பகுதியில் அதிகமாக நடவு செய்யப்பட்டு உள்ளது. பன்றிகள் அட்டகாசத்தால் மரவள்ளி கிழங்கு சாகுபடியை விட்டு விட்டோம். மேலும் காட்டுப்பன்றிகளில் இனப்பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் வனத்துறையினர் விரைவாக செயல்பட்டு காட்டுப் பன்றிகளை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்., என்றனர்.

Advertisement