ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் டிச., 16ல் கையெழுத்தாகும்

புதுடில்லி: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தடை யற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் டிசம்பர் 16ம் தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது:பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகரம் ஐரோப்பிய யூனியனின் முக்கிய நிர்வாக நகரமாக இருந்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி அந்நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த பயணத்தின்போது டிசம்பர் 16ம் தேதி வாக்கில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து 2027 ஜன., முதல் ஒப்பந்தம் நடை முறைக்கு வரும். வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து குறைந்த வரியில் அல்லது வரியில்லாமல் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement