நாமக்கல் ‘மாஜி’ எம்.எல்.ஏ., மீது ரூ.84 லட்சம் மோசடி புகார்
நாமக்கல்: ‘நிலம் தருவதாக கூறி, 84 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நாமக்கல் தி.மு.க., -– முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் மீது, கண்ணுார்பட்டியை சேர்ந்த கோழித்தீவன வியாபாரி செங்கோட்டுவேல், 41, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம், 22,500 சதுரடி நிலத்தை, ஒரு சதுரடி, 1,450 ரூபாய்க்கு விலை பேசினார். தொடர்ந்து, பல தவணைகளாக, அவரது உறவினர் பெயரில், 32 லட்சம் ரூபாய், ராமலிங்கத்திடம், 52 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் நிலத்தை கிரயம் செய்து தராததுடன், பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராமலிங்கம் கூறுகையில், ‘‘அந்த நிலம், ஒரு நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது. 40 லட்சம் ரூபாய் கொடுத்த செங்கோட்டுவேலு, கிரயம் செய்யாமல், பணம் கேட்கிறார். பணம் வேண்டும் என்றால், நீதிமன்றத்திற்கு சென்றுதான் வாங்க வேண்டும். என் பெயரை கெடுப்பதற்காக, பொய் புகார் அளித்துள்ளார்’’ என்றார்.
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்