ஆன்லைன் பதிவு அதிகம்: காற்றாடிய முகாம்கள்

பெ.நா.பாளையம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில், பலர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

கவுண்டம்பாளையத்தில் 4,27,042 வாக்காளர்கள் உள்ளனர். இது கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர் எண்ணிக்கை ஆகும். இந்த தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் 547 பூத்துகள் இருந்தன. தற்போது 551 பூத்துகளாக அதிகரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, ஒரே இடத்தில் இரண்டு வாக்காளர்கள் இருப்பது, இறந்தவர்களின் பெயர்கள் இருப்பது, வீடு மாறி வேறு தொகுதிக்கு சென்றவர்கள் நீக்கப்பட்டனர். இரு நாட்களாக நடந்த வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்களில் மக்கள் பங்கேற்பது குறைவாகவே இருந்தது. ஆன்லைனில் பலர் விண்ணப்பித்ததே காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement