போலீஸ் ஸ்டேஷனில் 3 காதல் ஜோடி தஞ்சம்

ஆத்துார்: கெங்கவல்லி, கணேசபுரத்தை சேர்ந்த முத்துசாமி மகள் ஜீவிதா, 21, தலைவாசல் தனியார் கல்லுாரியில், பி.காம்., 3ம் ஆண்டு படிக்கிறார்.

நடுவலுாரை சேர்ந்த, சின்னதுரை மகன் தரண், 21. பெரம்பலுார் தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலித்த நிலையில், கடந்த, 19ல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்த ஐயப்பன் மகள் அபிநயா, 22. பி.ஏ., முடித்துள்ளார். அதே பகுதியை அருள் மகன் விக்ரம், 24. லாரி டிரைவர். இவர்கள் காதலித்த நிலையில், இருவீட்டு
பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 20ல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கெங்கவல்லி, கொண்டையம்பள்ளியை சேர்ந்த, பழனிவேல் மகள் தர்ஷினி, 21. பிஸியோ தெரபிஸ்ட். அதே பகுதியைச் சேர்ந்த, சின்னதம்பி மகன் முரளி, 21, கட்டட தொழிலாளி. இவர்கள் பள்ளியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த, 3 ஜோடிகளும், ஆத்துார் மகளிர் போலீசில் நேற்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார், அவரவர் பெற்றோரை வரவழைத்து பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.

Advertisement